sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கூடன்குளம் அணுமின் திட்டத்தில் ஊழல் தூத்துக்குடியில் வாழும் கலை நிறுவனர் குருஜி திடுக்

/

கூடன்குளம் அணுமின் திட்டத்தில் ஊழல் தூத்துக்குடியில் வாழும் கலை நிறுவனர் குருஜி திடுக்

கூடன்குளம் அணுமின் திட்டத்தில் ஊழல் தூத்துக்குடியில் வாழும் கலை நிறுவனர் குருஜி திடுக்

கூடன்குளம் அணுமின் திட்டத்தில் ஊழல் தூத்துக்குடியில் வாழும் கலை நிறுவனர் குருஜி திடுக்


ADDED : செப் 24, 2011 01:50 AM

Google News

ADDED : செப் 24, 2011 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனந்தசங்கமத்திற்கு முன்னதாக தூத்துக்குடியில் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலைய தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த மக்கள் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. மக்களுக்கு நாட்டுபற்று ஏற்பட்டு நாட்டு பிரச்னையை கையில் எடுத்து போராடி வெற்றி பெறுவது பாராட்டுக்குரியது. இதுபோன்ற நிலை தான் வரவேண்டும். எல்லா பிரச்னைகளையும் அரசியலுக்கு விடக் கூடாது.

மக்கள் எடுத்து செய்தால் அதில் உடனடி வெற்றி கிடைக்கும். இன்றைக்கு கிராமங்களில் கூட நாட்டுப்பற்று ஏற்பட்டு மக்களுக்கு பொறுப்பு ஏற்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பல இடங்களில் ஜாதி, மோதல்கள் ஏற்படுவது நிற்க வேண்டும். ஜாதி, மோதல், கலவரம் இன்றி மக்கள் எல்லோரும் சேர்ந்து வாழ வேண்டும். அதற்கான முயற்சிகளில் தான் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஆன்மிக சாரம் என்பது இதுதான். இதன் மூலம் வாழ்க்கையிலும், ஆன்மிகத்திலும் முன்னேற வேண்டும். அதற்கான திசையை நோக்கி வேலை செய்ய வேண்டும். இதற்கான பணியில் மீடியாக்கள் பங்கு முக்கியமாக உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. லோக்பால் விஷயம் வெளியில் கொண்டு வந்ததில் மீடியாக்கள் பங்கு மறக்க முடியாதது. நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் ஊழல் ஒழிய வேண்டும். ஊழல் அற்ற நாடாக நாடு மாற வேண்டும். ஊழல் ஒழிந்தால் நாடு தானாக முன்னேறி விடும். ஊழலுக்கு அரசியல் வாதிகள் மட்டுமின்றி எல்லோரும் காரணமாக இருக்கிறோம். மக்கள் லஞ்சம் கொடுக்காமல் இருக்க வேண்டும். அப்படி கொடுக்காமல் இருந்தால் வாங்குபவரால் எப்படி வாங்க முடியும். இதில் மக்களின் பொறுப்பும் மிக முக்கியம். மக்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்து ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஜப்பான் நாட்டில் அணுமின் திட்ட பாதிப்பை தொடர்ந்து அணுமின் திட்டம் குறித்த கவலை மக்களுக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. அது தான் கூடங்குளத்திலும் பிரதிபலித்துள்ளது. அணுசக்தி திட்டங்கள் அவசியம் தான். அதே நேரத்தில் அதனை விட பாதுகாப்பு மிக, மிக அவசியம். பாதுகாப்பு இல்லாமல் இருப்பது தான் மக்களை போராட்டத்திற்கு வழி வகுக்கிறது. கூடங்குளத்தில் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்த அரசு ஆழமாக விசாரிக்க வேண்டும். பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விளக்கமும், உறுதிமொழியும் அளிக்க வேண்டும். விஞ்ஞானிகள் மூலம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அணுமின் திட்டங்களில் பொதுவாக கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில் ஊழல் இருப்பதாக கூறப்படுகிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் எதிர்ப்பு வரும். அன்னாஹசாரே பாகிஸ்தானுக்கு செல்வதற்கும் அதுபோன்ற எதிர்ப்பு தான் வந்துள்ளது.

மக்கள் புத்திசாலிகளாக மாறி வருவதால் தான் தற்போது ஆன்மிக வளர்ச்சி அதிகரித்து கொண்டு வருகிறது. பயங்கரவாதம், தீவிரவாதம் ஒழிய மக்கள் சேர்ந்து பாடுபட வேண்டும். தூக்கு தண்டனை கூடாது. சிறையிலே அதற்கான தண்டனையை அவர் பெற்று விட்ட பிறகு தூக்கு தண்டனை அவசியம் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் வாழும் கலை பயிற்சியில் பயிற்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து பயிற்சி பெற்று நல்ல பயன் பெற்று வருகின்றனர். இவ்வாறு ரவிசங்கர்ஜி தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us