/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோவிலில் படம் எடுத்த 'டிவி' நடிகை
/
திருச்செந்துார் கோவிலில் படம் எடுத்த 'டிவி' நடிகை
ADDED : ஆக 08, 2025 11:31 PM

துாத்துக்குடி:திருச்செந்துார் கோவிலுக்குள் நின்று மொபைல் போனில் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சின்னத்திரை நடிகை மீது புகார் எழுந்துள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் மொபைல் போன்களை பயன்படுத்தினாலோ, போட்டோக்கள் எடுத்தாலோ பறிமுதல் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சிலரும், முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து, தங்களது மொபைல் போன்களை எடுத்து வந்து போட்டோக்களை எடுத்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், கோவிலுக்கு மகனுடன் வந்த சின்னத்திரை நடிகை தீபா பாபு என்பவர், கோவில் உட் பிரகாரத்தில் நின்றபடி, தன் மகனுடன் மொபைல்போனில் போட்டோ எடுத்தார். அந்த படங்களை, தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கு முருக பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
'கோவிலுக்குள் வரும்போது மொபைல் போன் கொண்டு வரக்கூடாது என தெரிந்தும், நடிகை தீபா பாபு அதை மீறியுள்ளார். அவரது மொபைல்போனில் போட்டோக்கள் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளதால், அவரது மொபைல்போனை ஆய்வு செய்வதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பக்தர்கள் கூறியுள்ளனர்.