/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
இரு வீடுகளை உடைத்து 128 சவரன் கொள்ளை
/
இரு வீடுகளை உடைத்து 128 சவரன் கொள்ளை
ADDED : ஆக 15, 2025 01:19 AM

துாத்துக்குடி, :கோவில் பூசாரி மற்றும் வியாபாரி வீடுகளில் பூட்டை உடைத்து 128 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
துா த்துக்குடி மாவட்டம், குலசேரகன்பட்டினம், கீழமலையான் தெருவைச் சேர்ந்தவர் குமார் பட்டர், 49. முத்தாரம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்த நிலையில், ஜுன் 16ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
அவரது மனைவி பிரியா மற்றும் குடும்பத்தினர் சில நாட்களில் வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
குமார் பட்டர் மறைவுக்கு பின், சம்பிரதாயம் படி பூஜை உள்ளிட்ட காரியங்கள் செய்வதற்காக நேற்று முன்தினம் பிரியா தன் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வீடு திரும்பியுள்ளார். முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே இருந்த பீரோக்களை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த, 107 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தது தெரியவந்தது. குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, உடன்குடி சோமநாதபுரத்தை சேர்ந்த வியாபாரி கணேஷ், 39, வீட்டிலும் மர்ம நபர்கள் 21 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
வழக்கு பதிவு செய்த குலசேகரன்பட்டினம் போலீசார் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.