/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
'கவர்னர் மாநாட்டுக்கு செல்லாத துணைவேந்தர்கள் பாராட்டுகுரியோர்'
/
'கவர்னர் மாநாட்டுக்கு செல்லாத துணைவேந்தர்கள் பாராட்டுகுரியோர்'
'கவர்னர் மாநாட்டுக்கு செல்லாத துணைவேந்தர்கள் பாராட்டுகுரியோர்'
'கவர்னர் மாநாட்டுக்கு செல்லாத துணைவேந்தர்கள் பாராட்டுகுரியோர்'
ADDED : ஏப் 26, 2025 02:25 AM
துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க., முதனமை செயலர் துரை அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், தமிழக கவர்னர் ரவி, துணைவேந்தர்களை தேவையின்றி அழைத்து, ஊட்டியில் மாநாடு நடத்தி உள்ளார். மாநாட்டை புறக்கணித்த துணைவேந்தர்கள் பாராட்டுக்குரியோர்.
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் இறந்துள்ளனர். அவர்கள் மீதான தாக்குதல் கொடூரமானது. இதை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவரா எனக் கேட்டு, அதன் பின்பு சுட்டுக் கொன்றுள்ளனர்.
காஷ்மீரைப் பொறுத்தவரை, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வர். அப்படிப்பட்ட இடத்துக்கு, கூடுதல் பாதுகாப்பு இருந்திருக்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக, முன்னாள் ராணுவ வீரர்கள் கூறுகின்றனர். பயங்கரவாதிகள் மீதான அரசு நடவடிக்கைக்கு எல்லோரும் ஆதரவாக இருக்க வேண்டும்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் தமிழக மக்களின் வாழ்வாதர பிரச்னைகள் குறித்து பார்லிமென்ட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேசியுள்ளார். பல விஷயங்களுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது.
அதற்காகவாவது ம.தி.மு.க., பொதுச்செயலர் மீண்டும் எம்.பி.,யாக வேண்டும். வைகோவை, ராஜ்யசபாவுக்கு அனுப்புவது குறித்து, தி.மு.க., தலைமை நல்ல முடிவு எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

