/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
/
ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
ADDED : ஜன 25, 2025 02:02 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை அருகே வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர், 70; விவசாயி. இவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் இடம் மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ளது. பத்திரப்பதிவுத் துறையால் ஜீரோ மதிப்பு என மதிப்பிட்டுள்ளது.
இதனால், அந்த இடத்திற்கான உண்மைத்தன்மை சான்று பெறுவதற்காக வடக்கு சிலுக்கன்பட்டி வி.ஏ.ஓ., எட்டுராஜ், 53, என்பவரிடம் விண்ணப்பித்தார்.
லஞ்சமாக 5,000 ரூபாய் கொடுத்தால் சான்றிதழ் தருவதாக எட்டுராஜ் கூறியதைத் தொடர்ந்து, பணம் கொடுக்க விரும்பாத சுதாகர், துாத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
டி.எஸ்.பி., பீட்டர் பால்துரை தலைமையிலான குழுவினர் நேற்று, சுதாகருடன் வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்திற்கு சென்றனர். வி.ஏ.ஓ., எட்டுராஜியிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்கும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணைக்குப் பின், எட்டுராஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

