/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெண்களிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு மீது வழக்கு
/
பெண்களிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு மீது வழக்கு
ADDED : நவ 10, 2024 11:09 PM

துாத்துக்குடி, ; துாத்துக்குடி, வடபாகம் காவல் நிலைய ஏட்டு, சுரேஷ், 41, என்பவர், கதிர்வேல்நகரில் வசிக்கிறார்.
இவர், 2ம் தேதி நள்ளிரவு, அப்பகுதியில் பெண்கள் தனியாக இருந்த ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ஆபாச செய்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தர்மராஜ், என்பவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தன் செயலுக்கு அந்த ஏட்டு மன்னிப்பு கேட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனால், எஸ்.பி.,யின் கவனத்துக்கு இந்த தகவலை எடுத்து செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏட்டுவின் அத்துமீறல் குறித்து விசாரிக்க, எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேற்று முன்தினம் துாத்துக்குடி நகர, ஏ.எஸ்.பி., மதனுக்கு உத்தரவிட்டார்.
அவர் மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டன. அதையடுத்து, ஏட்டு சுரேஷ் மீது, சிப்காட் போலீசார், நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.