ADDED : அக் 31, 2024 03:46 AM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: துாத்துக்குடி அருகே பேரூரணி வடக்கு தெருவை சேர்ந்த அன்னராஜ் என்பவர் மனைவி அன்னதங்கம், 47, உட்பட அப்பகுதி பெண்கள் நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அம்மன் கோவில் அருகே அவர்கள் சென்ற போது திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது.
கோவில் அருகே இருந்த மரத்தில் திடீரென விழுந்த இடி, அன்னதங்கத்தையும் தாக்கியதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடி தாக்கிய அதிர்ச்சியில் பெண்கள் சிலர் மயக்கமடைந்தனர்.
அன்னதங்கத்தின் உடலை மீட்ட தட்டப்பாறை போலீசார், பிரேத பரிசோதனைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
