/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தொழிலாளி வெட்டிக்கொலை துாத்துக்குடியில் பரபரப்பு
/
தொழிலாளி வெட்டிக்கொலை துாத்துக்குடியில் பரபரப்பு
ADDED : பிப் 16, 2025 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி, முள்ளக்காடு முனியசாமி நகரை சேர்ந்த ராஜா, 45, என்பவருக்கும், அவரது எதிர்வீட்டை சேர்ந்த சுரேஷ், 45, என்பவருக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் இருந்தது. இருவரும் கூலி தொழிலாளிகள்.
தண்ணீர் பிடிப்பது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் குடிபோதையில் இருந்தனர். அப்போது, சுரேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜாவின் உடலை கைப்பற்றிய முத்தையாபுரம் போலீசார், சுரேஷை கைது செய்தனர்.

