/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 'ஆயுள்'
/
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 'ஆயுள்'
ADDED : ஏப் 25, 2025 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக, போக்சோ வழக்கில் வாலிபருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே, நடுநாலுமூலைகிணறு பகுதியைச் சேர்ந்தவர் அருள் செல்வம், 25. அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக, 2019ல் திருச்செந்துார் போலீசார், அவரை கைது செய்தனர்.
விசாரணை துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சுரேஷ், அருள் செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.