
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், அழகேசபுரத்தை சேர்ந்த சோலையப்பன், 24, என்பவர், நேற்று முன்தினம் இரவு, நடராஜபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த அவர், அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தட்டிக்கேட்ட அதே பகுதியை சேர்ந்த சுப்பையா, அவரது மனைவி வள்ளியிடமும் சோலையப்பன் தகராறில் ஈடுபட்டு, அவதுாறாக பேசியுள்ளார். இந்த பிரச்னையை மொபைல்போன் மூலம் பழ வியாபாரியான மகன் செல்வகுமார், 26, என்பவரிடம் வள்ளி கூறினார்.
ஆத்திரமடைந்த அவர் சோலையப்பன் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஏற்பட்ட தகராறில், சோலையப்பன் நெஞ்சில் செல்வகுமார் கத்தியால் குத்தினார்.
காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார். துாத்துக்குடி வடபாகம் போலீசார்,
செல்வகுமாரை கைது செய்தனர்.