ADDED : ஏப் 12, 2025 01:14 AM
அ நிறம் | அளவு
வாணியம்பாடி, திருப்பத்துார்
மாவட்டம், வாணியம்பாடி ஆசிரியர் நகரை சேர்ந்தவர் முனீர் அஹமத், 56.
இவர், நேற்று மதியம் தன்னுடைய இ-பைக்கை, வீட்டின் போர்டிகோவில்
சார்ஜிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மின்கசிவு
காரணமாக இ-பைக் எரிய தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்
பக்கத்தினர் உதவியுடன், மின் இணைப்பை துண்டித்து, உடனடியாக தண்ணீர்
ஊற்றி தீயை கட்டுப்
படுத்தி அணைத்தார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்
பட்டது.
