ADDED : மார் 20, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காளை முட்டியதில் முதியவர் பலி
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் நேற்று காளை விடும் விழா நடந்தது. இதில், ஆந்திரா, கர்நாடகா, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், திருப்பத்துார் அடுத்த சின்னமண்டலவாடியை சேர்ந்த சின்னமுனுசாமி, 55, என்பவர் காளை விடும் விழாவை பார்க்க வந்தார். காளை அவரை முட்டியதில் படுகாயமடைந்து பலியானார். ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.