/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்ற 6 பேர் 'சஸ்பெண்ட்'
/
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்ற 6 பேர் 'சஸ்பெண்ட்'
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்ற 6 பேர் 'சஸ்பெண்ட்'
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்ற 6 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 05, 2024 08:39 PM
ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுவை கூடுதல் விலைக்கு விற்ற, 6 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
திருப்பத்துார் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதாக வந்த புகார் படி, சேலம் முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலான பறக்கும் படை குழுவினர், கடந்த மாதம், 28ல், திருப்பத்துார் மாவட்டத்திலுள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, 6 டாஸ்மாக் கடைகளில், மதுவை, 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
அக்கடை விற்பனையாளர்களான அனந்த நாராயணன், மாய கேசவன், சீனிவாசன், கோவிந்தராஜி, இளங்கோ மற்றும் விநாயகம், ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.