/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ஓடும் ரயிலில் மொபைல் நகை பறித்த வாலிபர் கைது
/
ஓடும் ரயிலில் மொபைல் நகை பறித்த வாலிபர் கைது
ADDED : நவ 02, 2025 01:32 AM
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே, ஓடும் ரயிலில் இருவரிடம், மொபைல்போன், வெள்ளி செயின் பறித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ரயிலின் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபரிடம் மொபைல் போன், இதேபோல, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சென்ற வாலிபரின், கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி செயின் மற்றும் மொபைல்போனை பறித்து கொண்டு, ஒரு வாலிபர் தப்பியோடினார்.
மொபைல்போன் பறிகொடுத்த வாலிபர்கள், ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். ரயில்வே போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை வைத்து விசாரணை நடத்தியதில், மொபைல்போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டது, ஆம்பூர் அடுத்த கம்பிகொல்லை பகுதியை சேர்ந்த பரமேஷ், 20, என தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு பரமேஷ், ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுற்றித்
திரிந்த போது, அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

