/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
எம்.எல்.ஏ.,வுக்கு கருப்பு கொடி
/
எம்.எல்.ஏ.,வுக்கு கருப்பு கொடி
ADDED : நவ 02, 2025 02:16 AM
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பஞ்.,க்குட்பட்ட பாங்கிஷாப் பேஷ் இமாம் நகர், ஸ்டார் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. நேற்று, அப்பகுதியில் வீடுதோறும் மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக சென்ற ஆம்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வில்வநாதன் காரை வழிமறித்து, கருப்பு கொடி காட்டினர். காரை நிறுத்திய எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார்.
அவர், ''தேவலாபுரம் என் தொகுதிக்குட்பட்ட பகுதி கிடையாது. குடியாத்தம் தி.மு.க., - எம்.எல்.ஏ., அமுலுவுக்கு உட்பட்ட பகுதி. இருந்த போதிலும், இது குறித்து அவரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்றார். இதையடுத்து, அப்பகுதி மக்கள், அங்கிருந்து கலைந்தனர்.

