/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., உறவினர் வீட்டில் ரெய்டு
/
அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., உறவினர் வீட்டில் ரெய்டு
அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., உறவினர் வீட்டில் ரெய்டு
அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., உறவினர் வீட்டில் ரெய்டு
ADDED : ஏப் 04, 2024 10:29 PM
திருப்பத்துார்:திருப்பத்துார், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஜி.ரமேஷின் உறவினர் நவீன்குமார், 42. இவர், திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி எதிரே உள்ள காந்திபேட்டை திருநாத முதலியார் தெருவில் வசிக்கிறார்.
திருப்பத்துார் பஸ் ஸ்டாண்டில் டிஜிட்டல் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். மேலும், திருமண மண்டபம், பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களைக் கைப்பற்றி, விசாரணை நடத்தினர். மேலும் அங்கு, 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். பறிமுதல் செய்த பணம் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.