/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது கன்டெய்னர் லாரி; டிரைவர் பலி
/
25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது கன்டெய்னர் லாரி; டிரைவர் பலி
25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது கன்டெய்னர் லாரி; டிரைவர் பலி
25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது கன்டெய்னர் லாரி; டிரைவர் பலி
ADDED : மார் 02, 2025 01:44 AM

திருப்பத்துார் : நாட்றம்பள்ளி அருகே, 25 அடி பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், டிரைவர் பலியானார்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்வர்கான், 46. இவர், வி.டி., டிரான்ஸ்போர்ட் பார்சல் சர்வீஸ் கன்டெய்னர் லாரியில், பிப்., 26ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து, பார்சல்களை ஏற்றிக்கொண்டு சென்னை சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஏழரைப்பட்டி கிராமம் அருகே நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் சென்றபோது, அன்வர்கான் துாக்கக் கலக்கத்தில் இருந்ததால், பாலாற்று கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது லாரி மோதி, பாலத்திலிருந்து, 25 அடி பள்ளத்தில் கன்டெய்னர் கவிழ்ந்தது.
இதில், படுகாயமடைந்த அன்வர்கான், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார். நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.