/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
'டைல்ஸ்' நிறுவனத்தில் விடிய விடிய சோதனை
/
'டைல்ஸ்' நிறுவனத்தில் விடிய விடிய சோதனை
ADDED : ஜூன் 27, 2024 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையம்பட்டில் உள்ள, 'நியூ ராயல் டைல்ஸ்' என்ற நிலையத்தில், வரி ஏய்ப்பு செய்வதாக புகார் வந்தது.
இதனால் வேலுார் வணிக வரித்துறை அதிகாரிகள், 10 பேர் குழுவினர், நேற்று முன்தினம் மாலை, அங்கு சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து விடிய விடிய நடந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, அதன் ஊழியர்களிடமும் விளக்கங்களை கேட்டறிந்தனர். பின், ஆவணங்களை எடுத்துச் சென்று விசாரிக்கின்றனர்.