/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ரூ.1.34 லட்சம் கையாடல் பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'
/
ரூ.1.34 லட்சம் கையாடல் பஞ்., செயலர் 'சஸ்பெண்ட்'
ADDED : பிப் 25, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார் : பஞ்., வரி பணத்தில், 1.34 லட்சம் ரூபாய் கையாடல் செய்த தென்னம்பட்டு பஞ்., செயலர் நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், மாதனுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்னம்பட்டு பஞ்., செயலராக ராஜகம்பீரம், 49, பணியாற்றி வந்தார்.
இவர், கூடுதல் பொறுப்பாக, மேல்சாணாங்குப்பம் பஞ்., செயலராகவும் இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் வீரங்குப்பம் பஞ்., செயலராக பணியாற்றியபோது, அங்கு பஞ்., வரிப் பணத்தில், 1.34 லட்சம் ரூபாய் கையாடல் செய்தது, தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை, மாதனுார் பி.டி.ஓ., நேற்று 'சஸ்பெண்ட்' செய்தார்.

