/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பரோட்டாவால் வாலிபர் பலி மருத்துவமனையில் தாய் 'அட்மிட்'
/
பரோட்டாவால் வாலிபர் பலி மருத்துவமனையில் தாய் 'அட்மிட்'
பரோட்டாவால் வாலிபர் பலி மருத்துவமனையில் தாய் 'அட்மிட்'
பரோட்டாவால் வாலிபர் பலி மருத்துவமனையில் தாய் 'அட்மிட்'
ADDED : மார் 07, 2025 02:43 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டதில் வாலிபர் பலியானார்.
திருப்பத்துார் அடுத்த பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி, 24. இவர், மார்ச் 1ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டைக்கு சென்றார். அங்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, சிங்காரப்பேட்டை மகனுார்பட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா வாங்கி வந்து, தாய் ராஜேஸ்வரியுடன் சாப்பிட்டார். பாலாஜிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ராஜேஸ்வரிக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இருவரும் திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று முன்தினம் இரவு பாலாஜி உயிரிழந்தார். ராஜேஸ்வரி சிகிச்சையில் உள்ளார். திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.