/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக - ஆந்திர எல்லையில் சோதனை
/
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக - ஆந்திர எல்லையில் சோதனை
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக - ஆந்திர எல்லையில் சோதனை
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக - ஆந்திர எல்லையில் சோதனை
ADDED : மே 30, 2024 09:35 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில், தமிழக வருவாய்த்துறையினர் மற்றும் ஆந்திர போலீசார், வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி, வாகனங்களை மாநில எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர்.
தமிழக - ஆந்திர எல்லை வழியாக ரேஷன் அரிசி கடத்தல் நாளுக்குள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், எல்லை பகுதிகளில் தீவிர சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொது வினியோக திட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக, நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் ராமன் மற்றும் வருவாய்த்துறையினர், ஆந்திர மாநிலம் குப்பம் போலீசாருடன் இணைந்து, தமிழக - ஆந்திர மாநில எல்லைகளான கொத்துார், மல்லானுார், சொரக்காயல், நத்தம் மல்லகுண்டா, தகரகுப்பம் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லையில் வந்து செல்லும் அனைத்து வாகனங்களையும், சோதனை செய்த பிறகே, மாநில எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர்.