/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
லாரியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பில் கார் உதிரி பாகம் திருடிய 4 பேர் கைது

ADDED : நவ 27, 2025 02:22 AM
திருப்பத்துார், திருப்பத்துார் அருகே, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் உதிரி பாகங்களை திருடி சென்ற, 4 பேரை கைது செய்துள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாங்காத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அர்ஷத், 32. சென்னை ஒரகடம் பகுதியிலுள்ள கமலம் டிரான்ஸ்போர்ட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த, 21ம் தேதி, சென்னை ஒரகடத்தில் இருந்த கார் உதிரி பாகங்கள் ஏற்றி கொண்டு பெங்களூரு சென்றபோது, ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியில் தாபா ஹோட்டல் அருகே, லாரியை நிறுத்தி விட்டு, மீண்டும், 23ம் தேதி லாரியை பெங்களூருக்கு ஓட்டி செல்ல சென்றார்.
அப்போது, லாரியின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், தன் டிரான்ஸ்போர்ட் மேலாளருக்கு தகவல் தெரி வித்தார். மேலாளர் கண்ணதாசன், ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, லாரி உதிரி பாகங்களை திருடிய, குடியாத்தம் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்த ஜூனத், 22, ஷபிக் முகமத், 19, முகமது அஹமத், 18, ஹபிபூர் ரஹ்மான், 23, ஆகிய நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.