/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நெடுமரம் மஞ்சுவிரட்டில் 685 காளைகள் பங்கேற்பு; காளைகள் முட்டி 35 பேர் காயம்

ADDED : மார் 25, 2025 12:22 AM

திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே நெடுமரம் மலையரசி அம்மன் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 34 பேர் காயமுற்றனர்.
பொட்டலுக்கு வெளியே 500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன.
கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மலையரசி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மஞ்சுவிரட்டு தொழுவிற்கு என்.புதுார், நெடுமரம், ஊர்குளத்தான்பட்டி, உடையநாதபுரம், சில்லாம்பட்டி ஆகிய ஊர் நாட்டார்கள் ஊர்வலமாக வந்தனர். பிறகு மாடுபிடிவீரர்கள் உறுதி மொழி எடுத்தனர்.
நேற்று காலை 11:30 மணிக்கு கோயில் காளை முதலில் அவிழ்க்கப்பட்டது. தொழுவிற்கு வந்த 203 காளைகளில் 18 காளைகள் நிராகரிக்கப்பட்டன.
185 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 53 மாடுபிடி வீரர்களில் ஒருவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 52 பேர் காளைகளை அடக்கினர். மஞ்சுவிரட்டில் சுற்றுக்கு 27 வீரர்கள் வீதம் 3 சுற்றுக்கள் நடந்தன. பொட்டலில் 500 க்கும் மேற்பட்ட கட்டுகாளைகளை அவிழ்த்து விட்டனர்.
காளைகளை அடக்கிய வீரர், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர் உட்பட 35 பேர் படுகாயமுற்றனர்.
பலத்த காயமுற்ற 13 பேர் திருப்புத்துார், சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.