/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
துாங்கிய தம்பதி மீது 'ஸ்பிரே' அடித்து நகை, பணம் கொள்ளை
/
துாங்கிய தம்பதி மீது 'ஸ்பிரே' அடித்து நகை, பணம் கொள்ளை
துாங்கிய தம்பதி மீது 'ஸ்பிரே' அடித்து நகை, பணம் கொள்ளை
துாங்கிய தம்பதி மீது 'ஸ்பிரே' அடித்து நகை, பணம் கொள்ளை
ADDED : பிப் 06, 2025 02:16 AM
திருப்பத்துார் அடுத்த எலவம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன், 42, டீக்கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் கள்ளச்சாவி போட்டு வீட்டின் கதவை திறந்த மர்மநபர்கள், அறையில் துாங்கிக் கொண்டிருந்த கோவிந்தன் மற்றும் அவர் மனைவி மீது, மயக்க ஸ்பிரே அடித்து, அவர்களை மயக்கமடையச் செய்தனர்.
பின், பீரோவில் இருந்த, 4 சவரன் நகை, 10,000 ரூபாய் மதிப்பு வெள்ளி பொருட்கள், 25,000 ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
நேற்று காலை மயக்கம் தெளிந்து எழுந்த கோவிந்தன், வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, கந்திலி போலீசார் விசாரிக்கின்றனர்.