நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏலகிரியில் கரடி அதிகரிப்பு
திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏலகிரி மலை காப்புக்காட்டில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தண்ணீர் தேடி, மலை அடிவார குடியிருப்பு பகுதிகளுக்கு அவை அடிக்கடி வருகின்றன. வனப்பகுதிகளிலும் அதிகம் சுற்றித் திரிகின்றன.
இதனால் சுற்றுலா பயணியர் அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது. மீறி செல்வது அல்லது வன உயிரினங்களை துன்புறுத்தும் செயலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஏலகிரி வனச்சரக அலுவலர் சோழராஜன் எச்சரித்துள்ளார்.