ADDED : அக் 04, 2024 02:02 AM
அ நிறம் | அளவு
ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 47; பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர். கல்லுாரி மாணவி ஒருவரிடம் இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார்.
இது குறித்து, அப்பகுதி இளைஞர்களிடம் அந்த மாணவி தெரிவித்தார்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ., பிரமுகர் சரவணனை, இளைஞர்கள் தட்டிக் கேட்டனர். அப்போது பா.ஜ., பிரமுகர், வாலிபர்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்.
