/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
டெங்குவுக்கு சிறுவன் பலி போலி பெண் டாக்டர் கைது
/
டெங்குவுக்கு சிறுவன் பலி போலி பெண் டாக்டர் கைது
ADDED : செப் 20, 2024 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:திருப்பத்துார் அடுத்த பொம்மிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி உதயகுமார், 38. இவரது மகன் கவியரசு, 9.
கடந்த, 17ம் தேதி, கவியரசுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பால், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார். இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் பொம்மிக்குப்பத்தில் ஆய்வு செய்தனர்.
தனஞ்செயன் மற்றும் நந்தினி, ஆகியோர் மருத்துவம் படிக்காமல், சிறுவனுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. நந்தினியை கைது செய்த போலீசார், தலைமறைவான தனஞ்செயனை தேடி வருகின்றனர்.