/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
கூட்டுறவு டி.ஆர்., மீது லஞ்ச வழக்கு பதிவு
/
கூட்டுறவு டி.ஆர்., மீது லஞ்ச வழக்கு பதிவு
ADDED : பிப் 17, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்: திருப்பத்துாரை அடுத்த பெரியகுனிச்சி கிராமம், நாயுடு வட்டத்தை சேர்ந்தவர் தர்மேந்திரன், 54; கந்திலி வட்டார கூட்டுறவு துணை பதிவாளர். வருமானத்-திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக எழுந்தபுகாரில், திருப்பத்துார் விஜிலென்ஸ் போலீசார் விசாரித்தனர்.
இதில் அவர் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும், 48.64 லட்சம் ரூபாய் மதிப்பி-லான சொத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருப்-பத்துார் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து, முதல் தகவல் அறிக்கை நகலை, சென்னை விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு வடக்கு எல்லை காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ளனர்.

