/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
காட்டன் சூதாட்டம்: 8 பேர் கைது ரூ.57ஆயிரம் பறிமுதல்
/
காட்டன் சூதாட்டம்: 8 பேர் கைது ரூ.57ஆயிரம் பறிமுதல்
காட்டன் சூதாட்டம்: 8 பேர் கைது ரூ.57ஆயிரம் பறிமுதல்
காட்டன் சூதாட்டம்: 8 பேர் கைது ரூ.57ஆயிரம் பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாணியம்பாடி, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே, மறைவான பகுதியில் இரவு பகலாக காட்டன் சூதாட்டம் நடப்பதாக, வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அபுபக்கர், முருகன், முபாரக், ஜெயிலாவுதின், முஸ்தாக், கோவிந்தசாமி, சரவணன், ஏழுமலை உள்ளிட்ட, 8 பேர் பணம் வைத்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வாணியம்பாடி போலீசார், எட்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, 57 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.