/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நாணயத்தை விழுங்கிய சிறுமி உயிரை காப்பாற்றிய டாக்டர்
/
நாணயத்தை விழுங்கிய சிறுமி உயிரை காப்பாற்றிய டாக்டர்
நாணயத்தை விழுங்கிய சிறுமி உயிரை காப்பாற்றிய டாக்டர்
நாணயத்தை விழுங்கிய சிறுமி உயிரை காப்பாற்றிய டாக்டர்
ADDED : ஏப் 15, 2025 05:48 AM
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த சின்னபொன்னேரியை சேர்ந்தவர் சிவா - லலிதா தம்பதி. இவர்களின் மகள் கனிஸ்ரீ, 7; வீட்டுக்கு வெளியே நேற்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது, 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டார். நாணயம் தொண்டையில் சிக்கியதால் சிறுமி மயங்கினார். திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
காது, மூக்கு, தொண்டை நிபுணரான தீபானந்தன் விடுமுறையில் இருந்தார். ஆனாலும், குழந்தையின் நலன் கருதி, மருத்துவமனைக்கு வந்தார். கனிஸ்ரீக்கு சிகிச்சை அளித்து, தொண்டையில் சிக்கிய நாணயத்தை அகற்றி காப்பாற்றினார். சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க டாக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.