/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
திருப்பத்துார் போலி டாக்டர் கைது
/
திருப்பத்துார் போலி டாக்டர் கைது
ADDED : டிச 26, 2024 11:53 PM
ஜோலார்பேட்டை:திருப்பத்துார் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமல் பலர், மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருப்பத்துார் மாவட்ட தலைமை மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதியில், நேற்று சோதனை செய்தனர். அப்போது, திருப்பத்துார் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா,49, என்பவர் முறையான மருத்துவம் படிக்காமல், 10ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு சமூக மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் குறித்த இரண்டரை ஆண்டு படிப்பை மட்டும் படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.
அப்துல்லாவிடம் தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறி தலைமை மருத்துவர் சிவக்குமார் மருத்துவம் பார்க்க சென்றபோது வந்திருப்பது தலைமை மருத்துவர் என அறியாமல், அப்துல்லா மருத்துவம் பார்க்க முயன்றுள்ளார். அப்போது, அவரை கையும் களவுமாக மருத்துவ குழுவினர் பிடித்து, அவரிடமிருந்து, 2,000 ரூபாய் மதிப்பிலான ஆங்கில மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
பின், அவரை திருப்பத்துார் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். திருப்பத்துார் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி டாக்டர் அப்துல்லாவை கைது செய்தனர்.