/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ஏலகிரி மலையில் தீ போக்குவரத்து பாதிப்பு
/
ஏலகிரி மலையில் தீ போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 07, 2025 01:36 AM
ஏலகிரி: ஏலகிரி மலையில், 13வது கொண்டை ஊசி வளைவில் மர்ம நபர்கள் தீ வைத்ததில், தீ மளமளவென பரவி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைக்கு, வார விடுமுறை நாட்களில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்வர். அதன்படி நேற்று ஏராளமானோர் வந்திருந்தனர்.
மலை பாதையில், 13வது கொண்டை ஊசி வளைவில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததில், அப்பகுதியில் காய்ந்திருந்த செடி, கொடிகள் மள மளவென பற்றி எரிந்தன. இந்த தீ பரவி, சாலைகளில் விபத்தை தடுக்க அமைக்கப்பட்டிருந்த டயர்களில் பற்றி எரிந்தது.
மலைப்பகுதி சாலைகள் முழுதும் புகை மூட்டமானதால், சுற்றுலா பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர். திருப்பத்துார், ஏலகிரி, ஜோலார்பேட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.