/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மீனவர், மீன் தொழில் தகவல் கணினி மயமாகிறது: மத்திய மீன்வளத்துறை திட்டம்
/
மீனவர், மீன் தொழில் தகவல் கணினி மயமாகிறது: மத்திய மீன்வளத்துறை திட்டம்
மீனவர், மீன் தொழில் தகவல் கணினி மயமாகிறது: மத்திய மீன்வளத்துறை திட்டம்
மீனவர், மீன் தொழில் தகவல் கணினி மயமாகிறது: மத்திய மீன்வளத்துறை திட்டம்
ADDED : அக் 15, 2024 07:22 AM
திருப்புத்துார் : மீன் வளம் மற்றும் மீனவர் சார்ந்த தகவல்களை பொதுச்சேவை மையங்கள் மூலம் சேகரித்து கணினிமயமாக்க மத்திய அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த அமைச்சகத்தின் புதிய முயற்சியாக நாட்டிலுள்ள மீன்கள் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்களின் விவரங்கள் கணினிமயமாக உள்ளது. அதற்காக தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் (http://nfdp.dof.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. பொதுச் சேவை மையங்கள் மூலம் இந்த டிஜிட்டல் தளத்தில் மீன் தொழில் சார்ந்த தகவல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளது.
மீனவர்கள், மீன் வியாபாரிகள், மீன் பண்ணை வைத்திருப்பவர்கள், மீன் பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மீன்கள் சார்ந்த தொழிலில் உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இத்தளத்தில் மீனவர்களின் அலைபேசி எண்கள், ஆதார் எண்கள், வங்கி கணக்கு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். மீனவரின் ஆதார் அட்டையில் உள்ள அலைபேசியில் ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்பட்டு, சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. பின்னர் அதற்கான தற்காலிக சான்றிதழ் மீனவர்களுக்கு வழங்கப்படும். பதிவேற்றம் செய்த தகவல்கள் மாவட்ட மற்றும் மாநில மீன்வளத்துறை அதிகாரிகளால் சரி பார்க்கப்பட்டு இறுதி செய்யப்படும். அதன் பின் நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விவரங்கள் சேகரிப்பின் மூலம் பகுப்பாய்வின் மூலம் சான்று அடிப்படையில் மீனவள மேலாண்மைக்கு அடித்தளம் அமைக்கவும், மீன்வளத்திற்கான தேவையான கொள்கைகள் வகுக்கவும், கூட்டுறவை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

