/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மாணவியிடம் பாலியல் சீண்டல் சிக்கினார் தலைமை ஆசிரியர்
/
மாணவியிடம் பாலியல் சீண்டல் சிக்கினார் தலைமை ஆசிரியர்
மாணவியிடம் பாலியல் சீண்டல் சிக்கினார் தலைமை ஆசிரியர்
மாணவியிடம் பாலியல் சீண்டல் சிக்கினார் தலைமை ஆசிரியர்
ADDED : செப் 08, 2025 03:29 AM
ஆம்பூர்: மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, தலைமை ஆசிரியர் மீது, துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க, வட்டார கல்வி அலுவலர்கள் பரிந்துரைத்தனர்.
திருப்பத்துார், ஆம்பூரை அடுத்த மேல் சாணாங்குப்ப ம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர், 48. இரு நாட்களுக்கு முன் மது போதையில் பள்ளிக்கு வந்தவர், மாணவி ஒருவரை மடியில் அமர வைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ ஆதாரத்துடன், மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாதனுார் வட்டார கல்வி அலுவலர்கள் பீட்டர், முருகேசன் விசாரித்தனர். தலைமை ஆசிரியர் மீதான புகார் உண்மை என தெரிந்ததால், அந்த பொறுப்பிலிருந்து அவரை விடுவித்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, சி.இ.ஓ.,வுக்கு பரிந்துரைத்தனர்.
ஏற்கனவே, வெங்கடாபுரம் தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த இவர், பா லியல் புகாரில் சிக்கியதால் இப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கும் அதே புகாரில் சிக்கியுள்ளார்.