/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பெண் ஊழியரை முத்தமிட்ட ஹெச்.எம்., கைது
/
பெண் ஊழியரை முத்தமிட்ட ஹெச்.எம்., கைது
ADDED : அக் 16, 2024 07:26 AM
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 53; ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பூனைகுட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். கணவனை இழந்த, 26 வயது பெண், பள்ளியில் தற்காலிக கணினி ஆப்பரேட்டராக பணிபுரிகிறார்.
பள்ளியில் நேற்று முன்தினம் மாலை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கு, திடீரென சுப்பிரமணி முத்தம் கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண், தன் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் நேற்று காலை பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஜோலார்பேட்டை போலீஸ் மற்றும் வட்டார கல்வி அலுவலர் அசோக்குமாரிடம் புகாரளித்தனர். அவர்கள் விசாரணையை தொடர்ந்து, சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.