/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
போக்சோவில் கைதான ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'
/
போக்சோவில் கைதான ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 09, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்; திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மேல்சாணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர், 56; மூன்று நாட்களுக்கு முன், பள்ளிக்கு மது போதையில் சென்றவர், ஒரு மாணவியை மடியில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதுகுறித்த புகாரில், மாதனுார் வட்டார கல்வி அலுவலர்கள் விசாரித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மலைவாசனுக்கு பரிந்துரைத்தனர்.
அவர் புகார் படி, உமராபாத் போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து, பாரத் அம்பேத்கரை நேற்று கைது செய்தனர். அவரை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மலைவாசன், 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.