/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ரூ.69 லட்சம் மோசடி புகாரில் இன்ஸ்., மனைவி, மகன் கைது
/
ரூ.69 லட்சம் மோசடி புகாரில் இன்ஸ்., மனைவி, மகன் கைது
ரூ.69 லட்சம் மோசடி புகாரில் இன்ஸ்., மனைவி, மகன் கைது
ரூ.69 லட்சம் மோசடி புகாரில் இன்ஸ்., மனைவி, மகன் கைது
ADDED : செப் 26, 2025 10:48 PM

திருப்பத்துார்:ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் எனக்கூறி, 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த இன்ஸ்பெக்டரின் மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அய்யனுாரை சேர்ந்தவர் செந்தில்குமார், 50; வேலுார் கலால் இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மாலதி, 47. தம்பதியின் மகன் நித்திஷ்குமார், 25.
இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தனியார் பள்ளியில் படித்தார். அப்போது, இவருடன் சேர்ந்து படித்தவர் திருப்பத்துாரை சேர்ந்த சந்தோஷ்குமார்.
நித்திஷ்குமார், டிரேடிங், ஷேர் மார்க்கெட் ஆகியவற்றில் முதலீடு செய்தால், இரட்டிப்பு பணம் கிடைக்கும் என, தன் நண்பர்கள், உறவினர்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பி, சந்தோஷ்குமார் மற்றும் பலர், நித்திஷ்குமாரிடம் பணம் கொடுத்தனர். யாருக்கும் பணம் திரும்ப கொடுக்கவில்லை.
சந்தோஷ்குமார், திருப்பத்துார் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கூறுகையில், 'நித்திஷ்குமார், டில்லியில் யு.பி.எஸ்.இ., கோச்சிங் சென்டரில் சேர்ந்த போது, கேரளாவை சேர்ந்த அஞ்சனா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அங்கு, டிரேடிங் கம்பெனி ஆரம்பித்துள்ளனர்.
அதில் வாடிக்கையாளர்களை முதலீடு செய்ய வைக்க, தன் நண்பர்கள், உறவினர்களிடம், 69 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். நித்திஷ்குமார், மோசடிக்கு உடந்தையாக இருந்த மாலதி இருவரையும் நேற்று கைது செய்து, தலைமறைவான அஞ்சனாவை தேடி வருகிறோம்' என்றனர்.