/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் பலி; காதலி 'சீரியஸ்'
/
மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் பலி; காதலி 'சீரியஸ்'
மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் பலி; காதலி 'சீரியஸ்'
மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் பலி; காதலி 'சீரியஸ்'
ADDED : மார் 18, 2025 01:05 AM
ஏலகிரி ; புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்தவர் ஜெயராமன், 45. ராணிப்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி, 35. நேற்று முன்தினம் திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலைக்கு வந்தனர். அங்கு கொட்டையூரில் உள்ள தனியார் சொகுசு பங்களாவில் தங்கினர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் சந்தேகமடைந்த பங்களா ஊழியர்கள், அறைக்குள் சென்று பார்த்தபோது இருவரும் மயங்கி கிடந்தனர்.
அருகில் மது பாட்டிலும், எலி பேஸ்ட்டும் கிடந்தது. அவர்கள், மதுவில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்தது தெரிந்தது. ஏலகிரி மலை போலீசார் பார்த்தபோது, ஜெயராமன் இறந்து கிடந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த காமாட்சியை மீட்டு, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில், ஜெயராமனுக்கும், காமாட்சிக்கும் கள்ளக்காதல் இருந்ததும், ஏலகிரி மலைக்கு வந்த அவர்கள் திடீரென தற்கொலைக்கு முயன்றதும் தெரிந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.