ADDED : ஏப் 23, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 28. இவர், அப்பகுதியை சேர்ந்த பாப்பையன் என்பவரின் விவசாய நிலத்தில் இரும்பு கொட்டகை அமைத்து, இரண்டு ஆண்டாக பன்றி வளர்த்து வருகிறார்.
பண்ணையில் கம்பி வேலி அமைக்கும் பணி நடந்தது.
அப்போது வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது, துாக்கி வீசப்பட்டவர், அருகில் பன்றிகளுக்கு சமைத்து சூடான உணவு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்தவரை, வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் இறந்தார்.

