/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நின்றிருந்த லாரி மீது கார் மோதல் மாமியார், மருமகன் பலி
/
நின்றிருந்த லாரி மீது கார் மோதல் மாமியார், மருமகன் பலி
நின்றிருந்த லாரி மீது கார் மோதல் மாமியார், மருமகன் பலி
நின்றிருந்த லாரி மீது கார் மோதல் மாமியார், மருமகன் பலி
ADDED : டிச 02, 2025 03:03 AM
திருப்பத்துார், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யமோன், 50. இவரது மனைவி லவ்லி, 47. இவரின் தாய் ரோஸ்லி, 72. மூவரும் நேற்று காலை ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மஹேந்திரா காரில் சென்றனர்.
காரை லவ்லி ஓட்டினார். திருப்பத்துார் மாவட்டம், சென்னை - பெங்களூரு சாலையில், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலையோரம், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதன் மீது, அதிகாலை, 5:00 மணியளவில், துாக்க மயக்கத்தில், லவ்லி ஓட்டிச்சென்ற கார் மோதியது. இதில், லவ்லியின் கணவர் திவ்யமோன், தாய் ரோஸ்லி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.