/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நியூசி., தோட்டத்தில் வேலை என கூறி ரூ.2 கோடி மோசடி
/
நியூசி., தோட்டத்தில் வேலை என கூறி ரூ.2 கோடி மோசடி
ADDED : நவ 28, 2024 02:50 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நாயன செருவு பகுதியை சேர்ந்த பூபதி, 40, சுபாஷ், 42, ஆகியோர், 'நியூசிலாந்து நாட்டில் கிவி பழத்தோட்டத்தில், வேலை செய்ய, மாத சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதற்கு ஆட்கள் தேர்வு செய்து அனுப்ப உள்ளோம்; அதற்கு பணம் செலுத்த வேண்டும்' என கூறி, 70க்கும் மேற்பட்டோரிடம், ஒவ்வொருவரிடமும், ஒரு லட்சம் ரூபாய் முதல், 8 லட்சம் ரூபாய் வரை என, 2 கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றி விட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் நேற்று, பூபதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திம்மாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போராட்டத்தை கைவிட செய்தனர்.