/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
குழந்தையை கடத்த முயன்ற வட மாநில வாலிபர்
/
குழந்தையை கடத்த முயன்ற வட மாநில வாலிபர்
ADDED : அக் 09, 2025 03:16 AM
திருப்பத்துார்:மன நலம் பாதித்த வடமாநில வாலிபர், ஆண் குழந்தையை கடத்த முயன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூரில், 2 வயது ஆண் குழந்தை வீட்டின் முன் தெருவில் நேற்று மாலை விளையாடி கொண்டிருந்தது.
அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென துாக்கி கடத்த முயன்றார்.
இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து அவரை பிடித்து, மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
அம்பலுார் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்ததில், குழந்தையை கடத்த முயன்றவர், வடமாநில வாலிபர் என்பதும், அவர் மனநலம் பாதித்தது போல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, விசாரித்து வருகின்றனர்.