/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
8 பேர் பலியான விவகாரத்தில் பல் டாக்டருக்கு நோட்டீஸ்
/
8 பேர் பலியான விவகாரத்தில் பல் டாக்டருக்கு நோட்டீஸ்
8 பேர் பலியான விவகாரத்தில் பல் டாக்டருக்கு நோட்டீஸ்
8 பேர் பலியான விவகாரத்தில் பல் டாக்டருக்கு நோட்டீஸ்
ADDED : ஜூன் 02, 2025 04:10 AM
வாணியம்பாடி: வாணியம்பாடியில் பல் சிகிச்சை பெற்ற, 8 பேர் பலியான விவகாரத்தில், தனியார் மருத்துவமனை டாக்டருக்கு, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி, கச்சேரி சாலையில், வி.டி.எஸ்., தனியார் பல் மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த, 2023 காலகட்டத்தில் டாக்டர் அறிவரசனிடம் சிகிச்சை பெற்ற எட்டு பேர், ஆறு மாத கால இடைவெளியில் அடுத்தடுத்து இறந்தனர்.இதுகுறித்து வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை மற்றும் ஐ.சி.எம்.ஆர்.என்.ஐ.இ., மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனரகம் உள்ளிட்ட பல அமைப்பு மருத்துவர்கள் குழு விசாரணை நடத்தியது. இதில் பாக்டீரியா தொற்றால், எட்டு பேரும் பலியானது தெரிய வந்தது.
இதனிடையே புகாருக்கு ஆளான தனியார் பல் மருத்துவமனையில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், 2023ல்
'வி.டி.எஸ்., பல் மருத்துவமனை' என்ற பெயரில் செயல்பட்ட மருத்துவமனை, தற்போது 'அறிவு பல் மருத்துவமனை' பெயரில் நடத்துவதற்கான ஆவணங்கள், எட்டு பேர் சிகிச்சை மேற்கொண்ட விபரம் குறித்து விளக்கம் கேட்டு, இணை இயக்குனர் ஞான மீனாட்சி, அறிவரசனுக்கு தபாலில், நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 'மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனவும் தெரிவித்துள்ளார்.