/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பட்டா நிலம் புறம்போக்கு என பதிவு: 1,400 பேர் தவிப்பு
/
பட்டா நிலம் புறம்போக்கு என பதிவு: 1,400 பேர் தவிப்பு
பட்டா நிலம் புறம்போக்கு என பதிவு: 1,400 பேர் தவிப்பு
பட்டா நிலம் புறம்போக்கு என பதிவு: 1,400 பேர் தவிப்பு
ADDED : செப் 06, 2025 02:24 AM
வாணியம்பாடி:வாணியம்பாடியில், 1,400 பட்டா இடங்களுக்கு, அரசு பதிவேட்டில் புறம்போக்கு இடம் என பதியப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில், 23, 24வது வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் சவுந்திரவல்லி உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர். இதில், பஷிராபாத், ஷாகிராபாத், சலாமாபாத் பகுதியில் உள்ள வீட்டு மனைகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் சப் - டிவிஷன் செய்து, புதிய எண் கொடுக்கப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டு, அரசு பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அவற்றை சரி செய்ய மனு அளித்தனர்.
வாணியம்பாடி டவுன் பகுதியில், 1,400 பேருக்கு சொந்தமான வீடு, காலி மனைகள் உள்ளிட்டவற்றிற்கு பட்டா, பத்திரம், உரிய ஆவணங்களோடு, 50 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த இடங்கள், அரசு பதிவேட்டில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள் என பதிவாகியுள்ளதால், அந்த இடத்தின் உரிமையாளர்கள் இடத்தை விற்கவோ, வங்கிகளில் அடமான கடன் பெறவோ, வாரிசுதாரர்களின் பெயர்களுக்கு மாற்றம் செய்யவோ முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் வி.ஏ.ஓ., மற்றும் தாசில்தார், ஆர்.டி.ஓ., - கலெக்டர் வரை சென்றும், இரண்டு ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க கோரி, மீண்டும் முகாமில் மனு அளித்துள்ளனர்.