/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
போதையில் டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் நண்பருடன் கைது
/
போதையில் டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் நண்பருடன் கைது
போதையில் டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் நண்பருடன் கைது
போதையில் டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் நண்பருடன் கைது
ADDED : மே 28, 2025 01:01 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஆண்டியப்பனுாரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கார்த்திக், 34. இவர், மிட்டூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் மாலை நின்றிருந்தார்.
அங்கு மது போதையில் வந்த புதுார் கிராமத்தை சேர்ந்தவரான, சென்னை பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரியும் கோதண்டராமன், 35, மற்றும் அவரது நண்பரான நாராயணபுரத்தை சேர்ந்த விஷ்ணு, 25, ஆகியோர் கார்த்திக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்கினர்.
காயமடைந்த கார்த்திக், திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, போலீஸ்காரர் கோதண்டராமன், அவரது நண்பர் விஷ்ணு ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.