/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பொதுவழி ஆக்கிரமிப்பை தட்டி கேட்டதால் தாக்கிய தி.மு.க., நிர்வாகியை கண்டித்து மறியல்
/
பொதுவழி ஆக்கிரமிப்பை தட்டி கேட்டதால் தாக்கிய தி.மு.க., நிர்வாகியை கண்டித்து மறியல்
பொதுவழி ஆக்கிரமிப்பை தட்டி கேட்டதால் தாக்கிய தி.மு.க., நிர்வாகியை கண்டித்து மறியல்
பொதுவழி ஆக்கிரமிப்பை தட்டி கேட்டதால் தாக்கிய தி.மு.க., நிர்வாகியை கண்டித்து மறியல்
ADDED : ஜன 17, 2024 01:22 PM
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, பொதுவழி ஆக்கிரமிப்பை தட்டி கேட்டவரை, தி.மு.க., நிர்வாகி உள்ளிட்டோர் தாக்கியதை கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், அரசம்பட்டி, தி.மு.க., கிளை செயலாளர் ஆனந்தன், 45; இவரது அண்ணன் அனுமுத்து, 48; இவர்களது நண்பர் ஜெமினி கணேசன், 46; மூவரும் சேர்ந்து அப்பகுதியிலுள்ள, பொதுவழி பாதை மற்றும் அரசு இடத்தை ஆக்கிரமித்து சிமென்ட் குடோன் கட்டியுள்ளனர். இதனால் வழியின்றி தவித்த, அவ்வழியாக சென்று வரும், 20 குடும்பத்தினர், திருப்பத்துார் தாலுகா போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நேற்று, புகார் கொடுத்தவரில் ஒருவரான சிவக்குமார், 30, என்பவர், குடோன் கட்டியுள்ள பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை, தி.மு.க, கிளை செயலாளர் ஆனந்தன், இவரது அண்ணன் அனுமுத்து, இவரது மகன் கார்த்திகேயன் ஆகிய மூவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தார்.இத்தாக்குதலை கண்டித்து, அப்பகுதி மக்கள், திருப்பத்துாரிலிருந்து - புதுார் நாடு செல்லும் சாலையில், 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். பொதுவழியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடோனை இடிக்க வலியுறுத்தினர். திருப்பத்துார் தாலுகா போலீசார் சம்பவ இடம் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, மறியலில் ஈடுபட்டர்களை சமாதானம் செய்து, விசாரித்து வருகின்றனர்.

