/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
தொழிலாளியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவருக்கு 'காப்பு'
/
தொழிலாளியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவருக்கு 'காப்பு'
தொழிலாளியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவருக்கு 'காப்பு'
தொழிலாளியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 22, 2025 12:34 AM
திருப்பத்துார்; முன்விரோதத்தில், தொழிலாளியை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் விஜய், 40; தொழிலாளி. இவருக்கு சொந்தமான இடத்தில், கட்டட பணி நடக்கிறது. கட்டட மேஸ்திரி மோகன், 35, மற்றும் தொழிலாளிகள் நேற்று பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மோகன் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆம்பூர் டவுன் போலீசார் விசாரித்தனர்.
இதில், சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், 38, என்பவருக்கும், விஜய்க்கும் முன்விரோதம் இருந்தது. அதனால் விஜயை கொல்ல விக்னேஷ், பல நாட்களாக திட்டம் தீட்டி வந்துள்ளார்.
கட்டட பணி நடந்து வரும் வீட்டில், யாருக்கும் தெரியாமல், மின் ஒயர்களில் இணைப்பை மாற்றி கொடுத்து, விஜயை கொல்ல முயன்றதும், இதில் கட்டட மேஸ்திரி மோகன் சிக்கி காயமடைந்ததும் தெரியவந்தது. போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.