/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
வெளிநாட்டில் வேலை ரூ.2.71 கோடி மோசடி
/
வெளிநாட்டில் வேலை ரூ.2.71 கோடி மோசடி
ADDED : செப் 22, 2024 02:05 AM
வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார், 30; இன்ஜினியரிங் பட்டதாரி. இவர், நியூசிலாந்திலுள்ள தனியார் கம்பெனி மற்றும் துறைமுகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி, போலியான ஆவணம் மற்றும் ஆதாரங்களை காண்பித்து, அப்பகுதியைச் சேர்ந்த, 44 பேரிடம், 2.71 கோடி ரூபாய் பெற்றார்.
பல மாதமாகியும் வேலைக்கு அனுப்பாத அவர், நீண்ட நாட்களாக சொந்த ஊரில் இல்லாததால், பணம் கொடுத்தவர்கள், கடந்த 1ம் தேதி அவர் வீட்டை முற்றுகையிட்டு, குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், வாணியம்பாடி டி.எஸ்.பி., விஜயகுமார் மற்றும் திம்மம்பேட்டை போலீசார் பேச்சு நடத்தினர்.
தலைமறைவான பிரதீப்குமாரை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பத்துாரிலுள்ள நண்பர்கள் வீட்டில் பதுங்கியிருந்த அவரையும், உடந்தையாக இருந்த நண்பர்கள் நாட்றம்பள்ளியை சேர்ந்த ஹரிகரன், தஞ்சாவூரை சேர்ந்த ஜியாவுல் ரகுமான் ஆகியோரையும் கைது செய்தனர்.