/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ஆம்பூரில் ஷூ தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்
/
ஆம்பூரில் ஷூ தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : ஜன 13, 2024 11:35 AM
திருப்பத்துார்:ஆம்பூர் அருகே, ஐந்து மாதமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் ஆத்திரமடைந்த, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் இயங்கி வரும் மொஹிப் ஷூ தனியார் தொழிற்சாலையில், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த, ஐந்து மாதமாக சரிவர சம்பளம் வழங்காததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆம்பூர் தாலுகா போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்திற்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கவில்லை.இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி ஆர்.டி.ஓ., பிரேமலதா, ஆம்பூர் தாசில்தார் குமாரி, ஆம்பூர் தாலுகா போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சமாதானம் செய்து, விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.----------