/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவருக்கு 'கம்பி'
/
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவருக்கு 'கம்பி'
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவருக்கு 'கம்பி'
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவருக்கு 'கம்பி'
ADDED : ஜூலை 14, 2025 06:32 AM
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 59; அதே பகுதி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை, மாங்காய் பறித்து தருவதாக மாந்தோப்புக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவி, அவரிடம் இருந்து தப்பிச் சென்று, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அவர்களின் புகார்படி, ஆலங்காயம் போலீசார் விசாரித்தனர்.
இதில், மாணவிக்கு சுப்பிரமணி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. தொடர்ந்து, சுப்பிரமணியை போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.